முன்னுரை :
“ஓசையில்லாத கொண்டாட்டமான புத்தக வாசிப்பே சிறந்த கேளிக்கை என்கிறார் எமர்சன்.
மொழியைக் குழந்தைகளின் வசமாக்க, மொழியை எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்திற்கு அடுத்தப்படியாக முதன்மைப் பங்கு வகிப்பது சிறார் இலக்கியம் ஆகும். சிறார் இலக்கியம் சிறப்பாக உள்ளச் சமுதாயமே மிகச்சிறந்த சமுதாயமாக வாழ முடியும். இன்றயை காலகட்டத்தில் சிறார் இலக்கியம் பரந்தபட்ட வளர்ச்சியையே அடைந்திருக்கின்றன.
சிறார் இலக்கியம் ஒரு பார்வை :
பெரியவர்களுக்கானது என்றறிறிந்த காலத்தில் குழந்தைகளுக்காக எழுதிக் குறித்தவர் அழ. வள்ளியப்பா. இவர் எழுதிய “மலரும் உள்ளம்” பழக்கம் குழந்கைளின் இதயம் கற்பனையில் மலா்ந்து விரியும். தான் எழுதியதோடு மட்டுமன்றி, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து உற்சாகப்படுத்தி எழுதவும் வைத்தவர் பண்டைய தமிழ் இலக்கியத்தில் சிறார் இலக்கியத்திற்கான தடங்கள் இருந்த போதிலும்,
16 ம் நூற்றாண்டில் ஔவையாரின் ஆத்திச்சூடி மூலம் தமிழில் குழந்தை இலக்கியம் தொடங்கியது. 19 ம் நூற்றாண்டில் இருந்து 20 ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது.
- 1840 – பாலதீபிகை சிறுவர்களுக்கான முதல் இதழாக வெளிவந்தது.
- 1901 – ல் கவிமணி சிறார் பாடல்
- 1915 – ல் பாரதியின் பாப்பா பாட்டு வெளிவந்தன.
- 1950 – குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் உதயம்
- 1957 ல் வை ராமசாமி அவர்கள் நடத்திய சிறுவர் நூல் கண்காட்சி சிறார் இலக்கியத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தன.
சிறார் இலக்கியம் இன்றைய நிலை :
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறார் இலக்கியம், இலக்கியம் வெளியில் பேசு பொருளாசியிருக்கிறது என்கிறார். “ஆதனின் பொம்மை” என்ற குழந்தை இலக்கிய நூலிற்காக 2023 – ம் ஆண்டு பால சாகித்திய புரசுக்காா் விருது பெற்ற எழுத்தாள் உதயசங்கர்
சிறார் இலக்கியம் தன்னுடைய இடத்தை அடைய எண்ணற்ற முயற்சிகள் நவீன எழுத்தாளா்களாலும் புதிய பதிப்பகங்களாலும் எடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
புத்தக பூங்கொத்து :
வகுப்பறைக்கு ஒரு நூலகம், எனும் புத்தகப் பூங்கொத்து திட்டத்தை, அரசுப் பள்ளிகளில், மாணவா்களின் வாசிப்பும் பழக்கத்தை ஏற்படுத்த 2009 ல் கொண்டுவரப்பட்டது. இந்த புத்தகங்களில் கதை, புதிர் வினாக்கள், விடுகதைகள் நாடகப் புத்தகங்கள், சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. எங்கள் பள்ளியில் மாணவர்களின் கண்பார்வையில் படும்படி கொத்துகளாக தொங்க விட்டிருக்கிறோம். மாணவர்கள் விரும்பிய புத்தகங்களை அவர்களாகவே, வாசிக்க நினைக்கும் நேரத்தில், புத்தகங்களையும் படித்தனர். அதனால் வாசிப்புத் தறின் மட்டுமன்றி, அடிப்படை கணக்குகளையும் அறிந்து கொண்டனா்.
வாசிப்பு இயக்கம்:
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முறையாக பெரும் முயற்சியோடு, பள்ளி ஆசிரியா்கள், அறிவொளி இயக்கத் தொண்டர்கள், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள், எழுத்தாளர்கள். மாணவா்கள், கல்வி நிபுணர்கள் இணைந்து பாடபுத்தகங்களுக்கு மாற்றாக சுயவாசிப்பு உக்திகளை உருவாக்கியுள்ளனர். 9 ம் வகுப்பு மாணவி முதல் 83 வயது கல்வியாளர் வரை வாசிப்பு இயக்கப் புத்தகங்களுக்கு பங்களித்துள்ளனர். (எ.கா ரமணி, முனைவர் வே. வசந்திதேவி அவர்கள்)
வாசிப்பு இயக்கத்தின் நோக்கங்கள் :
- குழந்தைகளை சுயமாக வாசிக்க வைப்பதே (Independent reading) வாசிப்பு இயக்கத்தின் முதன்மை நோக்கம்.
- கதை கேட்கும் குழந்தைகளைக் கதை வாசிக்கும் குழந்தைகளாக மாற்றுதல்.
- தட்டுத்தடுமாறி வாசிக்கும் குழந்தைகளைத் தன்னம்பிக்கையோடு வாசிக்க வைத்தல்.
- அரசுப் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் தறினை மேம்படுத்துதல்.
- குழந்தைகளை ஈர்க்கும் வகையில் வண்ணப் படங்களுடன் எளிமையான மொழியில் சிறு புத்தகங்கள் உருவாக்குதல்
- எளிய வீட்டுக் குழந்தைகளிடம் புத்தகங்களை கொண்டு சோ்த்தல்
- சிறு புத்தகங்களின் வழி வாசிப்பின் மீது ஆர்வத்தை தூண்டுதல்
- தன்னால் சுயமாக வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தல்
- குழந்தைகளுக்கான புத்தகங்களை உருவாக்குவதோடு அவர்களையும் எழுத வைத்துப் படைப்பாளிகளாக்குதல்.
வாசிப்பு இயக்க கதைகளின் தனித்தன்மை :
- ஒரு புத்தகத்தில் ஒரு கதை மட்டுமே இருக்கும்
- ஒரு புத்தகம் 16 பக்கங்களைக் கொண்டிருக்கும்
- மாணவா்களின் வயதின் அடிப்படையில் உருவாக்காமல், அவர்களின் வாசிப்புத் திறனுக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளன.
- புத்தகங்கள் 4 வாசிப்பு நிலைகளாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டுள்ளன.
| நிலை / Stages | வண்ணம் / Color Code |
| நுழை | நீலம் |
| நட | மஞ்சள் |
| ஓடு | சிவப்பு |
| பற | பச்சை |
ஓவ்வொரு புத்தகத்திலும் அட்டையுடன் வெளிப்பகுதியில் நான்கு நிலைக்குரிய நிறங்கள் தரப்பட்டுள்ளன. புத்தகங்களைப் பிரித்தறிவதும் அடுக்குவதும் எளிது.
பேச்சுமொழி, எழுத்து மொழி இரண்டிற்கும் இடையிலான குழந்தை மொழியில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குழந்தை மைய அனுகுமுறை :
- பேச்சு மொழி அடிப்படையிலான எளிய மொழி வாசிப்பு மொழி பயன்படுத்தப்பட்டது. (எ.கா “வாங்க” என்பதற்கு முன் “வாருங்கள்” சோதனை செய்து நீக்கப்பட்டது.
- சிறிய வாக்கியங்கள், மீண்டும் வரும் சொற்கள் தெளிவான படங்கள் மூலம் குழந்தைகளின் ஈடுபாடு உறுதி செய்யப்பட்டது.
- படிக்கத் தயங்கும் குழந்தைகளும் ஓவியங்கள் மூலம் கதைகளின் கருத்தை உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பெரியவா்கள் உதவியின்றி மாணவா்களே சரளமாக வாசிக்கும் வகையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- கடினமான சொற்கள் மிகுந்த கவனத்தோடு தவிர்க்கப்பட்டுள்ளன.
வாசிப்பு இயக்கத்தின் வெற்றிகள் :
- மாணவா்கள் ஆா்வத்துடன் வாசிக்கின்றனா்.
- வாசித்த நூலைக் கொண்டு, நாடகம், கதை, கதையோவியம், பொம்மலாட்டக் கதை, புத்தக விமர்சனம் போன்ற படைப்பாற்றல் மிக்க செயல்களை வெளிப்படுத்துகின்றனா்.
- சோர்வில்லாமல் வாசிக்கின்றனா்.
- விடைபெற்ற கூச்சம்
- என்னாலும் வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவா்களிடம் வாசிப்பு இயக்கம் விதைத்துள்ளது.
- நான் நல்லா வாசிச்சுட்டேன் எனும் மாணவனின் பெருமிதம் – மெல்ல மலரும் மாணவா்களின் நம்பிக்கை விதை – வாசிப்பு இயக்க நூல்கள்.
தமிழ்நாடு அரசின் தேன் சிட்டு புது ஊஞ்சல் இதழ் :
“அறிவை விரிவு செய், அகண்டமாக்கு பாவேந்தர்” பாரதிதாசனின் வார்த்தைகளுக்கேற்ப புதிய திட்டம், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒன்றை அவை, தேன்சிட்டு ஊஞ்சல், கனவு ஆசிரியா்.
பாடப்புத்தகங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என கற்றலையும், கற்பத்தலையும், கட்டாயமாக்கிக் கொண்டு ஆசிரியர்களும், மாணவர்களும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிறிது இளைப்பாறளாக, பாடப்புத்தகத்தைத் தாண்டி வெளி உலகத்தை அணுகும் ஒரு பாலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களன் கைகளில் இந்த மூன்று இதழ்களும்
கனவு ஆசிரியர் இதழ் – ஆசிரியா்களுக்காக
ஊஞ்சல் – நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக
தேன்சிட்டு – ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்காக
ஊஞ்சல் இதழ் :
மாதம் இருமுறை வெளிவரும் ஊஞ்சல் இதழில் மகிழ்ச்சிப் பாடல்கள், உயிதினங்கள் சொல்லும் சிறுக்கதைகள், சித்திக் கதைகள், ஓரிகாமி காகி மடிப்புக்கலை, ஓவியம் வரைதல் பயிற்சி, புதிர்கள கண்டுபிடித்தல், விடுகதைகள், புதிய நூல்களில் அறிமுகம், இரு மொழிக்கதைகள், நினைவுச் சி்ன்னங்கள், வயதினங்ள் குறித்து சுவராஸ்ய துணுக்குகள், மாணவர் படைப்புகள் சி்த்திர சோலையாக காட்சியளிக்கின்றன.
தேன்சிட்டு :
அறிவியல் சார்ந்த கேள்வி பதில்கள், புதிர்கள், அறிவியல் சோதனைகள், தொல்லியல் வரலாறுகள், தலைவா்கள் வரலாறு, விளையாட்டுகள், ஆரோக்கியமான உணவு முறைகள், வரலாற்றின் இன்றைய நிகழ்வுகள் என இதழ் முழுக்க பொது அறிவுச் சுரங்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இதழ், சிறார் இலக்கியத்தின் ஒருமைல்கள். பிஞ்சிலே அமுதை அளவிலும் நல் முயற்சி பாடப்புத்தகம் தாண்டிய சிறு அறிவை இந்த இதழ்கள் மாணவா்களிடத்தில் வளர்த்தெடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
முடிவுரை :
பிறா் எழுத்தில் நேரத்தைசெலவிடுங்கள் அது உங்களை மேம்படுத்தும் என்கிறார் சாக்ரடீஸ். இப்படிப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற குழந்தைகளுக்கு சிறு வயது முதலே வாசிப்பில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும். எளிய வீட்டுப் பிள்ளைகளான அரசுப்பள்ளி மாணவர்களின் மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சிறார் இலக்கியத்தில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. உண்மையில் தற்காலச் சிறார் இலக்கியம் வளற்முகத்தில் இருக்கிறது.
இணையத்திலும் ஊடகங்களிலும் நாளுக்கு நாள் காட்சி வடிவினை சிறார் இலக்கியங்களின் எல்லை விரிந்துகொண் டே செல்கிறது. அதே வேளையில் எழுத்து வடிவிலான சிறார் இலக்கியங்கள் எனும் ஆணி வேரை சிறப்பான முன்னெடுப்புகளின் மூலம் சாத்தியப்படுத்துகின்றது.
சான்றாதாரம் :
- இந்து தமிழ்திசை நாளிதழ்
- கனலி இணையம்
- தமிழ் விக்கிப்பீடியா
- வாசிப்பு இயக்கத்தில் மாநில கருத்தாளராக பயணித்த என் அனுபவம்.
– லதா அண்ணாதுரை, இடைநிலை ஆசிரியர், (தசிஎகச) நாமக்கல் மாவட்டச் செயலாளா்.
குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

