தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தஞ்சாவூர் மாவட்டக் கிளை நடத்திய மாணவர் விழா – 2026
பள்ளி மாணவர்களுக்கான படைப்புத்திறன் மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக தஞ்சாவூரில் மாணவர் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பெசன்ட் அரங்கத்தில் ஞாயிறுக்கிழமை 9.00 மணி முதல் 5.00 வரை நடைபெற்ற இவ்விழாவில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 56 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ந.எழிலரசன் வரவேற்புரையாற்றினார்.
இதில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார் மாணவர்களுக்கு அறிவார்ந்த கதைகளைச் சொல்லியும் கதை எழுதுவதற்கான பயிற்சியையும் அளித்தார். அவரைத் தொடர்ந்து நாடகக் கலைஞரும் திரைக்கலைஞருமான அன்பரசி நடிப்புப் பயிற்சி அளித்து மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து அவர்களே கதை வசனம் தயார் செய்து நாடகம் நடிக்க வைத்தார்.
மேலும் பரிக்சா அறக்கட்டளையின் அறிவியல் பரப்புரையாளர் வி.அறிவரசன் பல அறிவியல் செய்முறைகளை செய்து மாணவர்களையும் செய்ய வைத்தார். இறுதியாக தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைத் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ப.ஜெயராஜ் நன்றியுரையாற்றினார் . அனைத்து மாணவர்களுக்கும் கார்த்திகா கவின்குமார் சார்பில் புத்தகம் வழங்கப்பட்டது.
நன்றி





