எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள், சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சார்பாக ஒரு சங்கம் அமைய வேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார்.
சிறார் இலக்கியம் குறித்துச் சிறு சிறு உரையாடல்கள், புதிய நூல் வரவுகள், கலை இலக்கியச் செயற்பாடுகள் ஆகியவை ஆங்காங்கே நடைபெறத் தொடங்கின.
தமிழ்ச் சிறார் இலக்கியம் குறித்து உரையாட நண்பர்கள் சிலர் சென்னையில் சந்தித்தோம். ஆனால், இந்தச் சந்திப்புகளிலும் சிறார் இலக்கியம் குறித்து வெவ்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தோமே தவிர, ஓர் அமைப்பாக இணைவது குறித்து ஏதும் திட்டமிடவில்லை.
சென்னையில் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் மாநிலச் சந்திப்பு ஏற்பாடு செய்து அதில் சங்கத்தின் அவசியம் குறித்து உரையாடினோம்.
( அதற்கு பிறகான காலம் கொரோனா பேரிடர் காலம்)
“சிறார் கலை இலக்கியச் சந்திப்பு“ என்ற பெயரில் செப்.2020 மாதம் முழுதும் வார இறுதியில், மொத்தம் பத்துத் தலைப்புகள், இருபது பேச்சாளர்கள் எனக் கருத்தரங்கு நடைப்பெற்றது.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் 13 ஜூன்,2021 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது
இணைய வழியே ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு “சிறார் இலக்கியத்தில் ஆசிரியர்களின் பங்கு” என்ற கருத்தரங்கை நடத்தியது.
அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழாவைச் சங்கம் கொண்டாடியது. நவம்பர் மாதம் முழுதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் இணைய வழி நிகழ்வாகக் கொண்டாடியது.
“யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால்” என்ற தலைப்பில் இணைய வழியே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்தான உரையாடலை நடத்தியது.
சென்னை புத்தகக் காட்சியில் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழாவைச் சங்கம் நடத்தியது.
சென்னை புத்தகக் காட்சியில் பால சாகித்ய விருதாளர்களான யெஸ். பாலபாரதி (விருதாளர் 2020) மற்றும் மு. முருகேஷ் (விருதாளர் 2021) இருவருக்கும் சங்கம் பாராட்டுவிழா நடத்தியது.
சென்னையில் மாநில அளவிலான கூடுகை
சங்கம் தமிழ்நாடு மற்றும் புதுகையில் – பல்வேறு மாவட்டங்களில் தன்னார்வளர்களைக் கொண்டு தனது கிளைகளை ஆரம்பிக்கத் தொடங்கியது. அதனுடன் அரசு நூலகங்களில் புத்தக வாசிப்புக் குறித்துப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தியது.
சென்னைப் புத்தகக் காட்சியில் பால சாகித்ய 2023 விருதாளரான உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுவிழாவை சங்கம் நடத்தியது.
திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் சந்திப்பு 28/04/2024 அன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பில் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (நோக்கமும் அதன் பாதையும்) – தொகுப்பாசிரியர் பஞ்சு மிட்டாய் பிரபு நூல் வெளியானது.
இலண்டனில் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (நோக்கமும் அதன் பாதையும்) நூல் அறிமுக விழா. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் வெளியீடான இந்தப் புத்தகத்தைச் சங்கத்தின் பொருளாளர் பஞ்சு மிட்டாய் பிரபு அவர்கள் தொகுத்துள்ளார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு 2024 ஆம் ஆண்டு செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது.
‘பஞ்சுமிட்டாய்’ பிரபு அவர்களின் ‘ஆத்திசூடி குழந்தைப் பாடலா?’ என்கிற சிறுபுத்தகம் மாநிலக்குழு பொறுப்பாளர்களால் வெளியிடப்பட்டது.
tncwaa.co.in – இணையதளம் தொடக்கம். சங்கத்தின் செயற்பாடுகள், அறிக்கைகள், நிகழ்வுகள் மற்றும் சிறார் கலை-இலக்கியம் சார்ந்து ஆவணப்படுத்தும் நோக்கில் இணையதளம் தொடங்கப்பட்டது.

