கண்டிப்பாக கொண்டாட வேண்டிய தருணம் இது 🌟
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் .. இன்னொரு சாதனை கல் எட்டப்பட்டுள்ளது . நாம் நமக்கான இணைய தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம் என்கிற செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .
நம்முடைய முன்னோடிகளான அழ வள்ளியப்பா .. டாக்டர் பூவண்ணன் .. வாண்டு மாமா ஆகியோர்களின் காலத்தில் இருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் வேறு. இன்றைக்கு நாம் iPod சந்ததிக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம் .
இந்த சூழலில் நமக்கான இணையதளம் என்பது பல்வேறு வகைகளில் நம்மை குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு கண்டிப்பாக பயன்படும் . உலகெங்கிலும் உள்ள தமிழ் குழந்தைகளின் .. ஒப்பற்ற தோழனாக இந்த இணையதளம் விளங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்
வாசிப்பின் மீது அளவற்ற காதல் கொண்ட இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான குழந்தைகள் .. இந்த இணையதளத்தை நோக்கி தேனீக்களைப் போல மொய்த்தெடுக்கட்டும் . வருங்காலத்தின் விஞ்ஞானிகளை .. தத்துவ ஆசான்களை கவிஞர்களை கதாசிரியர்களை .. இன்னும் இன்னும் கலைஞர்களை .. உருவாக்குகின்ற ஒப்பற்ற பாதையை இந்த இணையதளம் அமைத்து தரட்டும் ..
வாழ்த்துக்கள்!
நன்றி,
ஆயிஷா இரா நடராசன்

