1954 ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்காக, விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கொடுக்கப்படுகின்றது.

விருதளிக்கும் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் வெளியான சிறார் படைப்பாக இருக்க வேண்டும்; மொழியாக்கம் கூடாது; நூல் மறுபதிப்பாக அல்லாமல், புதிதாக வெளியாகியிருக்க வேண்டும்; படைப்பாளர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்(NRI களுக்கும் அனுமதியில்லை); தொகுப்பு நூலாகவோ, ஒரு நூலின் சுருக்கப்பட்ட பதிப்பாகவோ இருக்கக் கூடாது, புத்தகங்கள் 9-16 வயதிற்கானதாக இருக்க வேண்டும், குறைந்தது 49 பக்கங்கள் இருத்தல் வேண்டும் போன்ற சில விதிமுறைகள் இருக்கின்றன. சில ஆண்டுகள் தனிப்படைப்புக்காக அல்லாமல், படைப்பாளர் சிறுவர் இலக்கியத்துக்குப் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பைக் கணக்கில் கொண்டு, படைப்பாளரைத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்திருக்கிறார்கள்.
2024ஆம் ஆண்டு வரை, இவ்விருதுக்கு நூலைத் தேர்வு செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமலிருந்தது. ஆனால் முதல்முறையாக 2025ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, எழுத்தாளர்கள் விண்ணப்பம் அனுப்பலாமென்று சாகித்திய அகாடமி 17/08/2024 அன்று நாளிதழில் செய்தி வெளியிட்டது.
‘விருது விண்ணப்பத்துடன் 01/01/2019 முதல் 31/12/2023 வரை வெளியான நூல்களை அனுப்பலாம்; 9-16 வயதினர்க்கான நூல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்; விண்ணப்பத்துடன் நூலின் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்; 16/09/2024க்குள் அனுப்ப வேண்டும்’ என்று அந்தச் செய்திக்குறிப்பு சொன்னது.
தமிழில் 2010-2024 வரை பால புரஸ்கார் விருது பெற்ற பட்டியல் கீழே:-
சாகித்திய பால புரஸ்கார் விருதுப் பட்டியல்
| 2010 | அந்தோணியின் ஆட்டுக்குட்டி(சிறுவர் நாவல்) | மா.கமலவேலன் |
| 2011 | சோளக்கொல்லை பொம்மை (சிறுவர் பாடல்கள்) | ம.லெ.தங்கப்பா |
| 2012 | காட்டுக்குள்ளே இசைவிழா (சிறுவர் சிறுகதைகள்) | கொ.மா.கோதண்டம் |
| 2013 | பவளம் தந்த பரிசு (சிறுவர் சிறுகதைகள்) | ரேவதி (ஈ.எஸ்.ஹரிஹரன்) |
| 2014 | விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் (சிறுவர் சிறுகதைகள்) | இரா.நடராசன் |
| 2015 | தேடல் வேட்டை (சிறுவர் பாடல்கள்) | செல்ல கணபதி |
| 2016 | ஒட்டு மொத்த குழந்தை இலக்கியப் பங்களிப்பு | குழ.கதிரேசன் |
| 2017 | ஒட்டு மொத்த குழந்தை இலக்கியப் பங்களிப்பு | வேலு சரவணன் |
| 2018 | சிறகு முளைத்த யானை (சிறுவர் பாடல்கள்) | கிருங்கை சேதுபதி |
| 2019 | ஒட்டு மொத்த குழந்தை இலக்கியப் பங்களிப்பு | தேவி நாச்சியப்பன் (தெய்வானை) |
| 2020 | மரப்பாச்சி சொன்ன இரகசியம் (சிறுவர் நாவல்) | யெஸ்.பாலபாரதி |
| 2021 | அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை (சிறுவர் சிறுகதைகள்) | மு.முருகேஷ் |
| 2022 | மல்லிகாவின் வீடு (சிறுவர் சிறுகதைகள்) | ஜி.மீனாட்சி |
| 2023 | ஆதனின் பொம்மை (இளையோர் நாவல்) | உதயசங்கர் |
| 2024 | தன்வியின் பிறந்தநாள் (சிறார் கதைகள்) | யூமா வாசுகி |
குறிப்பு:

