நமக்கு ஒரு கனவு காலங்காலமாக இருக்கிறது. அது தமிழ்ச் சிறார்களுக்கென உலகளாவிய ஒரு இலக்கிய வெளியை உருவாக்கித்தர வேண்டுமென்ற கனவு. இணையதள உருவாக்கத்தின் மூலம் அக்கனவு நனவாகிறது என்பது பேரானந்தம் அளிக்கிறது.
28.09.2023இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருச்செந்தூர் கிளை, குழந்தைகள் தினத்தில் ஆயிரம் குழந்தைகள் ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் நூலறிமுகங்கள் என பள்ளிகளில் புத்தகத் திருவிழாக்களை கொண்டாடத் தொடங்கியது. ஓரிரு நிகழ்வுகளிலேயே பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் குழந்தைகள் கைகளில் சென்று சேர்ந்தன. இப்போது இலட்சம் புத்தகங்கள் இலட்சிய மாணாக்கர்கள் என்று திருவிழாக்கள் தொடர்கின்றன. சிறார் சங்கத்தின் இணையதளம் உள்ளூரில் இருந்து உலக இலக்கியங்களையும் இனி தமிழ்ச் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் அற்புதமான பாலமாக இருக்கப்போகிறது.
வாசிப்பே வெல்லும்.
சண்முக வடிவு
திருச்செந்தூர் கிளை.

