தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் திருச்செந்தூர் கிளை 28/09/2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் கல்லாமொழியில் தொடங்கப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் நேரில் கலந்து கொண்டு சங்கத்தை தொடக்கி வைத்தார். சங்கத்தின் தொடக்க விழாவின் போது 25 சிறுவர்களுக்கு கதை எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது.
கயிறு நூல் அறிமுகம்
29/09/3023 அன்று தூத்துக்குடி மாவட்டம் நடுநாலுமூலைக்கிணறு கிராமத்தில் மாணவர்களிடையே கயிறு -புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. தோழர் பேச்சியம்மாள் மற்றும் தோழர் தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களிடம் நூல் பற்றிய திறனாய்வு செய்தார்கள். 25 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் கயிறு புத்தகம் வழங்கப்பட்டது.
கதை சொல்வோம் வாங்க!
06/10/2023 மணப்பாடு தூய ஆவி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ‘கதை சொல்வோம் வாங்க’என்ற சிறப்பு கருத்துமர்வு நடைபெற்றது. இதில் 6,7,8ஆம் வகுப்பு மாணவர்கள் 70 பேர் கலந்து கொண்டார்கள்.
ஆயிரம் குழந்தைகள் ஆயிரம் நூல்கள்
14 11 2023 குழந்தைகள் தினத்தன்று திருச்செந்தூர் அமலி நகர் ஆர் சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் புத்தக கண்காட்சி நடைபெற்றது ஆயிரம் குழந்தைகள் ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் நூல் அறிமுகங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. புக்ஸ் ஃபார் சில்ட்ரன் உடன் இணைந்து குழந்தைகளுக்கு குறைந்த விலையில் நூல்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
குழந்தைகள் நூலகம் திறப்பு
14 11 2023 குழந்தைகள் தினத்தன்று மாலை 6 மணி அளவில் ஆத்தூரில் தையல் பயிற்சி மையத்தில் அல்முபின் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. தசிஎகச சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
15/11/2023 அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் தசிஎகச சார்பில் தோழர் பேச்சியம்மாள் அவர்கள் பங்கேற்று புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.
16/11/2023 திருநெல்வேலி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அழவள்ளியப்பா அவர்களின் 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் “குழந்தைகள் மொழியில் உதயசங்கர் தாத்தாவின் கதைகள்” என்னும் நிகழ்வு நடைபெற்றது குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
வாசிப்புத் திருவிழா:
16/11/2023 ஆலந்தலை கார்மல் நடுநிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத் திருவிழா நடைபெற்றது. சிறார்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களை திறனாய்வு செய்தார்கள்.
17/11/2023
ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே வாசிப்பின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தப்பட்டது. குழந்தைகளுக்கான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
22/11/2023
பெரியதாழை சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. ஆயிரம் குழந்தைகள் ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் நூல் அறிமுகங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் வாசிப்பின் அவசியம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது. புக்ஸ் ஃபார் சில்ட்ரன் இணைந்து குறைந்த விலையில் புத்தகங்கள் வழங்கப்பட்டன சுமார் 2500 புத்தகங்களை குழந்தைகள் வாங்கினார்கள் எழுத்தாளர் சப்திகா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
புத்தக திறனாய்வு;
25/11/2023 தசிஎகச மற்றும் தோழமை அமைப்புகளுடன் இணைந்து தமிழ்ச் சிறார் இலக்கியம் யதார்த்தமும் எதிர்காலமும் – ஆதி வள்ளியப்பன் எழுதிய புத்தகத் திறனாய்வு கூட்டம் தூத்துக்குடியில் நடத்தப்பட்டது.
28/11/2013.
மாநில அளவில் கலைத்திருவிழாவில் ஆங்கில கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்ற வடக்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி அஸ்மா பாத்திமாவுக்கு தசிஎகச சார்பில் சாகித்ய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்ற ஆதனின் பொம்மை நூல் பரிசாக வழங்கப்பட்டது.
பெற்றோர் கூடுகை:
9.12.2023 பெரியதாழை சிறுமலர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. அதில் வாசிப்பின் அவசியம் பற்றிய நிகழ்வு நடைபெற்றது சிறார்களை வாசிக்கத் தூண்ட வேண்டியது பெற்றோர்களே என்பது வலியுறுத்தப்பட்டது எழுத்தாளர் சப்திகா அவர்கள் கலந்து கொண்டார்கள்.
புத்தகங்களுடன் புத்தாண்டு 01.01.2024.
டிசம்பர் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அச்சமயத்தில் புத்தகங்களுடன் புத்தாண்டு நிகழ்வும் இணைக்கப்பட்டது பள்ளியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
15.01.2024
கூட்டப்புளி பெருமணல் கிராமங்களில் புத்தகத் திருவிழா மற்றும் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடைபெற்றது. மாணவர்கள் தங்களுக்கான புத்தகங்களை தேர்வு செய்து அன்றைய நாளிலேயே வாசித்து கலந்துரையாடல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி வட்டமாக அமர்ந்து வாசிப்பை திருவிழாவாக கொண்டாடினார்கள்.
28.01.2024.
கடந்த ஆண்டில் தங்கள் வாசித்த புத்தகங்களில் பிடித்த புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்றது. கதைக் களம் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது.
25.02.2024.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு தோழமை அமைப்புகளுடன் இணைந்து முத்துநகர் கடற்கரையில் நடைபெற்றது. சாவித்திரிபாய் பூலே தொடர்பான புத்தகங்கள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டன.
நாங்க புத்தகம் வாங்க போறோம்.
7.02.2024 திருநெல்வேலியில் நடைபெற்ற பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவிற்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பெரியதாழை மணப்பாடு ஆலந்தலையைச் சார்ந்த பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கினார்கள். தொடர்வண்டி பயணத்தின் போது வாசிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுடன் உரையாடும் நிகழ்வும் நடைபெற்றது.
வானவில் நூலகம் திறப்புவிழா.
08/03/2024 – தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் வானவில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தசிஎகச கிளை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புத்தகங்கள் நூலகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன.
29/03/2024 உலக கதை சொல்லல் நாள் நிகழ்வுகள் வானவில் நூலகத்தில் நடைபெற்றது. கதை சொல்லல் , கதை கேட்டலின் அவசியமான குறித்து குழந்தைகளுடன் உரையாடல் நிகழ்த்தப்பட்டது.
20/04/2024 ஆலந்தலை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த எட்டு தோழர்கள் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் அவர்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்கள்.
22/04/2024 உலக புத்தக தினத்தை முன்னிட்டு வடக்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
23/04/2024 உலக புத்தக தினத்தன்று தூத்துக்குடியில் சிறகுகள் சிறார் நூலகம் தொடங்கப்பட்டது. புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
23/06/2024 தன்வியின் பிறந்தநாள் புத்தக வாசிப்பு அனுபவம் பகிர்வு வானவில் நூலகத்தில் நடைபெற்றது. குழந்தைகள் கதை சொல்லி மகிழ்ந்தனர்.
25/06/2024 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வடக்கு ஆத்தூர்) மாணாக்கர்களிடையே தன்வியின் பிறந்தநாள் புத்தகம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நோக்கம் செயல் திட்டம் அமைப்பு விதிகள் குறித்த கையேடு தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.
27/06.2024 பள்ளி மாணவர்களிடம் இலட்சம் புத்தகங்களை அறிமுகம் செய்யும் இலட்சம் புத்தகங்கள் இலட்சிய மாணவர்கள் மாபெரும் வாசிப்பு இயக்கம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி கூட்டப்பனை பள்ளியில் நடைபெற்றது.
06/07/2024 நவீன தமிழ்ச் சிறார் இலக்கியம் நோக்கமும் அதன் பாதையும் நூல் திறனாய்வு கூட்டம்-2 . தூத்துக்குடியில் சிறகுகள் சிறார் நூலகத்தில் நடைபெற்றது. திருச்செந்தூர் தூத்துக்குடி கிளைகள் மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் கடலும் போராளிகளும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
14/07/2024 தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் திருச்செந்தூர் கிளை சார்பாக எழுத்தாளர் ச .தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியுள்ள ‘பதிமூணில் ஒண்ணு’- புத்தக வாசிப்பு அனுபவ பகிர்வு கூட்டம் நடைபெற்றது.
21/07/2024 சிறார் வாசிப்பு செயல்பாட்டாளர் தசிஎகச திருச்செந்தூர் கிளை தலைவர் பேச்சியம்மாள் அவர்கள் எழுதிய ‘சாமிக்கிட்டே சொல்லிப்புட்டேன் ‘ என்னும் நூல் வெளியீடு நடைபெற்றது.
04/08/2024 தன்வியின் பிறந்தநாள்- புத்தக வாசிப்பு அனுபவம் திருச்செந்தூரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் பயிலகத்தில் நடைபெற்றது. கலந்து கொண்டு கதைகள் கூறிய அனைத்து குழந்தைகளுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
10/08/2024 இலட்சம் புத்தகங்கள் இலட்சிய மாணவர்கள் மாபெரும் வாசிப்பு இயக்கம்.புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி வீரபாண்டியன் பட்டினத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
15/08/2024 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பொம்மலாட்ட நிகழ்வு வானவில் நூலகத்தில் நடைபெற்றது . கழுதை வாசிப்பு இயக்கம் சார்பில் தோழர்கள் வருகை தந்து பொம்மலாட்ட நிகழ்வினை சிறப்பாக நடத்தினார்கள்.
27/09/2024 “அப்பா ஒரு கதை சொல்றீங்களா”- புத்தக வாசிப்பு அனுபவம் பகிர்வு கூட்டம் வானவில் நூலகம் முக்காணியில் நடைபெற்றது. எழுத்தாளர் இ.பா.சிந்தன் அவர்கள் காணொளி காட்சி மூலம் வந்து குழந்தைகளுடன் உரையாடினார்.
28/09/2024 “அப்பா ஒரு கதை சொல்றீங்களா?”-புத்தக வாசிப்பு அனுபவம் பகிர்வு கூட்டம். புத்தர் பூங்கா தோப்பூரில் நடைபெற்றது. இன்றைய நிகழ்விலும் எழுத்தாளர் இ.பா.சிந்தன் அவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டார்.
01/10/2024 தூண்டில் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடற்கரையோர கிராமத்தைச் சேர்ந்த 25 மாணாக்கர்கள் அறிவுச்சுடர் படிப்பகம் மற்றும் வானவில் நூலகத்திற்கு வருகை புரிந்தனர். 30 பதிப்பகங்களைச் சார்ந்த புத்தகங்கள் அவர்களுக்காக காட்சிப்படுத்தி வைக்கப்பட்டன. அவைகள் பற்றிய அறிமுகங்கள் செய்து வைக்கப்பட்டன.
08/10/2024 தூத்துக்குடி புத்தகத் திருவிழா பொது அரங்கில் சிறார் நூல்கள் வெளியீடு நிகழ்வு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின், நான் யார் மற்றும் அதிசய மோதிரம் ஆகிய புத்தகங்களும் கி. அமுதாசெல்வி அவர்கள் எழுதியுள்ள ‘புயலுக்குப்பின்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.புத்தக வெளியீடு நிகழ்வுகளையும் புத்தகத்தை பற்றிய திறனாய்வையும் குழந்தைகளே மேற்கொண்டார்கள் என்பது இதன் சிறப்பு அம்சம்.




