Tamil Nadu Children Writers and Artists Association

ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம்  – தசிஎகச கண்டனம்

Reading Time: < 1 minute

அரசுப் பள்ளி ஆசிரியர் சு. உமா மகேசுவரி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் சமகாலப் பள்ளிக் கல்வி சிக்கல்கள் குறித்து எழுதி வந்தார். விமர்சன செயல்களைத் தவறு என்று கூறி  விசாரணை நடத்திய செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் மாவட்ட கல்வி அலுவலரும் அதன் பிறகு பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

அவரது முகநூல் பதிவுகள் பகிரங்கமாக நீக்கப்பட்டதாகவும், அவரை வற்புறுத்தி மன்னிப்புக் கடிதம் வாங்கியுள்ளதாகவும் செய்தி வெளியாகின. இந்நிலையில் அரசு அதிகாரிகளின் இந்த ஜனநாயகமற்ற போக்கினை பல்வேறு சமூக ஆர்வலர்களும் அமைப்புகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியை உமா மகேஸ்வரியைத் தொடர்ந்து கல்வி சார்ந்து எழுதியும் பேசியும் செயல்பட்டும் வருபவர். சற்றும் ஓயாமல் பணி செய்பவர். கல்வி சார்ந்த அவரது கருத்துகளை ஊடகங்கள் வழியே வெளிப்படுத்துகிறார். அது அவரது கருத்துரிமை. அதை நன்னடத்தை விதிமீறல் என்று அரசு கூறியிருக்கிறது. இரு தரப்பும் தகுந்த விளக்கங்களுடன் நேர்மையாக விசாரணை நடத்தி அது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்.

அரசு ஊழியர் என்பதால் கருத்துரிமையைத் தடை செய்யும் இந்தச் செயலை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது.

நன்றி.

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts