வணக்கம்,
வாசித்தால் வானமும் வசப்படும். வாசிப்பு ஒன்றே நம் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும்.
வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது .
அன்றைய நாளில் உலக புத்தக நாளைக் கொண்டாடும்படி தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
என்ன செய்யலாம்?
- ஒவ்வொரு குழந்தையும் புத்தகங்களை வாசித்து, அவர்கள் வாசிப்பது போன்ற புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றலாம்.
- அதேபோல பெரியவர்களும் புத்தகங்களை வாசிப்பது போன்ற புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றலாம்.
- குழந்தைகள் தங்களுக்கு பிடித்த/வாசித்த புத்தகங்களைப் பற்றி எழுத்துப் பதிவாகவோ காணொளியாகவோ சமூக ஊடகங்களில் பதிவுசெய்யலாம்.
- கூட்டாக வாசிப்பதை ஒரு நிகழ்ச்சியாக தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கக் கிளைகள் நடத்தலாம்.
23.4.2023 தொடங்கி 30.4.2023 வரைக்குமான ஒரு வாரத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் உலக புத்தக நாளை நாம் கொண்டாடலாம்.
தமிழக முழுவதும் வாசிப்பை ஒரு இயக்கமாக, பண்பாடாக, அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்றாக மாற்றுகிற நடவடிக்கையைத் தொடங்குமாறு தமிழ்நாட்டு மக்களை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடே வாசிப்போம்!
- தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

