Tamil Nadu Children Writers and Artists Association

நினைவேந்தல் நிகழ்வு

Reading Time: < 1 minute

பாலபுரஸ்கார், இலக்கிய மாமணி உள்ளிட்ட விருதுகள் பெற்ற எழுத்தாளர் குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம் நினைவேந்தல் நிகழ்வை… தமுஎகச மற்றும் தசிஎகச இராஜபாளையம் கிளைகள் பெண்கள் மற்றும் சிறார் நூலகத்தில் நேற்று மாலை நடத்தியது.

எழுத்தாளர்கள்

ச.தமிழ்ச்செல்வன்
கா.உதயசங்கர்
கதைப்பித்தன்
மதுமிதா
மரு அகிலாண்ட பாரதி

திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பெரியார்குமார்

தசிஎகச கிளைச் செயலாளர் கார்த்திகா கஜேந்திரன்

தமுஎகச மாவட்டச் செயலாளர் நந்தன் கனகராஜ்

எழுத்தாளர் விஜயராணி, தமுஎகச செயற்குழு தோழர்கள்: செல்வகுமார், ஆரோக்கியராஜ் ஆகியோர் எழுத்தாளர் பற்றிய நினைவுரை ஆற்றினார்கள்.

தமுஎகச கிளைச் செயலாளர் மைதிலி கல்யாணி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் அவர்களது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை ய்யப்பட்டது.

ஐயாவின் இணையர் எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம் புதல்வர்கள் எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ, குறளமுதன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

கிளைத் தலைவர் கிருஷ்ணன்,
பொருளாளர் ஹரிகரகுமார் , எழுத்தாளர் முத்துஜெயா,கவிஞர் ஜீவலதா,ஓவியர் முனீசு மற்றும் செயற்குழுத் தோழர்கள் நிகழ்வுகளை ஒருங்கிணப்பு செய்திருந்தார்கள்.

நன்றி – கவிஞர்.நந்தன் கனகரா

More Articles & Posts