நான் வாசித்த புத்தகம் – 2025
‘குழந்தைகளுக்கான புத்தக மதிப்புரைப் போட்டி’
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் செப். 2025இல் உலக அளவிலான சிறுவர் இலக்கியப் புத்தக மதிப்புரைப் போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் பங்குபெற தமிழ்ப் பிள்ளைகளை அன்புடன் அழைக்கிறோம்.
குழந்தைகள் தாங்கள் வாசித்த புத்தகங்களில் சிறந்த நூலைப் பற்றி மதிப்புரை எழுதுங்கள். அப்புத்தகம் கதை / கவிதை / நாடகம் / கட்டுரை உள்ளிட்ட எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அப்புத்தகத்தின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து, அதன் எழுத்து நடை, ஓவியங்கள், வடிவமைப்பு என பல்வேறு விசயங்களை உள்ளடிக்கியதாக மதிப்புரை அமைய வேண்டுகிறோம்.
குழந்தைகளின் வாசிப்புத் திறன் குறித்தும், அவர்கள் தேர்வு செய்யும் புத்தகங்கள் குறித்தும் உரையாடலைத் தொடங்குவதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
பிரிவுகள்:
- 8 முதல் 12 வயது வரை (குறைந்தது 250 சொற்கள் இருக்க வேண்டும்)
- 13 முதல் 18 வயது வரை (குறைந்தது 450 சொற்கள் இருக்க வேண்டும்)
- தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மதிப்புரை இருக்கலாம்
- மதிப்புரை வழங்கும் புத்தகம் எந்த மொழியிலும் இருக்கலாம்
விதிமுறைகள்:
- கட்டுரைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: அக் 15, 2025
- ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம்
- 8 முதல் 12 வயது வரை: கட்டுரை குறைந்தது 250 சொற்கள் இருக்க வேண்டும்
- 12 முதல் 18 வயது வரை: கட்டுரை குறைந்தது 450 சொற்கள் இருக்க வேண்டும்
- அதிகப்பட்ச சொற்கள் வரையறை ஏதுமில்லை
- யுனிகோட் (Unicode) முறையில் தட்டச்சு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
- கட்டுரைகள் சொந்த ஆக்கங்களாகவும், முன்னர் வேறு எங்கும் வெளிவராதவையாகவும் இருத்தல் வேண்டும். (பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மதிப்புரையில் உள்ள பிழைகளை திருத்துவதில் மட்டும் உதவிசெய்து, குழந்தைகளின் உள்ளடக்கத்தில் தலையிடாமல் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.)
- ChatGPT (or any other AI) போன்ற தானியிங்கி உதவி இல்லாமல் எழுதியவாயக இருத்தல் வேண்டும்
- contact.tncwaa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்படும் மதிப்புரைகள் – தமிழ்ச் சிறார் எழுத்தாளர்களால் வாசிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். பின்னர் சங்கத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும்.
- தேர்வு செய்யப்பட்ட மதிப்புரைகளுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.
- தேர்வு செய்யப்பட்ட மதிப்புரைகள் – கிண்டில் புத்தகமாகவும் வெளியிடப்படும்
- மதிப்புரைக்கு – தமிழ், ஆங்கிலம், அல்லது வேறு மொழி புத்தகங்களைத் தேர்வு செய்யலாம் (ஆங்கிலப் புத்தகத்திற்கு – தமிழிலும் மதிப்புரை எழுதலாம், அதேபோல் தமிழ்ப் புத்தகத்திற்கு ஆங்கிலத்திலும் மதிப்புரை எழுதலாம்)
- மதிப்புரையை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் (இரண்டும் தனிப் பிரிவுகளாகக் கருதப்படும்)
- மதிப்புரை அனுப்பும் போது,
- புத்தகத்தின் பெயர்
- ஆசிரியர்பதிப்பகம்
- அட்டைப்படம்
- மொழிபெயர்ப்பு விவரங்கள்
- ஓவியரின் விவரங்கள்
- புத்தகம் எழுதப்பட்ட மொழி – தமிழ் / ஆங்கிலம் / வேறு மொழி என்றால் அதனைக் குறிப்பிடவும்
- மதிப்புரை எழுதும் குழந்தையின் பெயர்
- வயது
- மின்னஞ்சல் முகவரி
- Reference: தமிழ்ப் பள்ளி / அமைப்பின் பெயர் அல்லது தனி நபர்
- மதிப்புரை அனுப்பும் போது,
இணைந்து பணியாற்றும் அமைப்புகள்:
இம்முயற்சியின் எங்களுடன் இணைந்து பணியாற்றும் வெளிநாட்டு வாழ் தன்னார்வ அமைப்புகள்.
- திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி – இலண்டன்
- Edinburgh Tamil School – Scotland
- தமிழ் விடிவெள்ளி – மலேசியா
- லண்டன் தமிழ் கல்விக் கழகம்
- மொழி புத்தகம் பதிப்பகம் – இலங்கை
- சமூகம் இயல் பதிப்பகம் – ஐரோப்பா
- உலகாளவிய தமிழ்ப் பள்ளி
சிலப் பரிந்துரைகள்:
- மதிப்புரைக்குத் தேர்வு செய்யப்படும் தமிழ்ப் புத்தகங்கள் – 2000ஆம் ஆண்டிற்கு பிறகு வெளியான புத்தகங்களைத் தேர்வு செய்யும்படி அன்புடன் பரிந்துரைக்கிறோம். (ஆங்கிலம், வேறு மொழிப் புத்தகங்களுக்கு இது அவசியமில்லை)
- பிற்போக்குச் சிந்தனையுள்ள புத்தகங்களையும், மதம் சார்ந்த கருத்துகளைக் கொண்டு எழுதப்பட்ட புத்தகங்களையும் தவிர்க்கவும்.
- சமகால சிறார் இலக்கியத்திலிருந்து புத்தகங்களைத் தேர்வு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புத்தகப் பரிந்துரைகளுக்கு இங்கே பார்க்கவும்.
நன்றி,
உதயசங்கர்(தலைவர்) & சாலை செல்வம் (செயலாளர்)
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம்

