தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் உதயசங்கர் அவர்கள் 2023ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உதயசங்கருக்கு நல்வாழ்த்துக்கள். வானம் பதிப்பகம் வெலியிட்ட “ஆதனின் பொம்மை” என்னும் நூலுக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் 100க்கும் மேற்பட்ட சிறார் இலக்கிய நூல்களை படைத்தவர், தொடர்ந்து சிறார்களுக்கான இலக்கியத்திற்காகக் களப்பணியாற்றி வருபவர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத்தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து எழுத்துப்பணியையும் எழுத்திற்கான களப்பணியையும் ஆற்றிவரும் தோழர் உதயசங்கர் அவர்களுக்கு சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கிளைச்சங்கங்களின் சார்பாக எழுத்தாளர் உதயசங்கர் அவர்களை வாழ்த்துவதில் பெருமைகொள்கிறோம்.
நன்றி,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

