Tamil Nadu Children Writers and Artists Association

கல்வி சார்ந்து சில பரிந்துரைகள்.

Reading Time: < 1 minute

கொரோணா பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை மேலும் கவனம் செலுத்த வேண்டியவைகளை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்துகின்றது

நூலகம்:

1. கற்றலில் இருந்து விடுபட்டிருக்கும் குழந்தைகளுக்கு கலை தலையாய் பாலமாய் அமையும். கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் வாசிப்பினை குழந்தைகளிடத்தே ஊக்குவிக்கவேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்படும் நூலக புத்தகங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மாநில அளவில் ஒரு குழுவினை அமைத்து, பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதித்துவத்துடன் அது இயங்கி ஒவ்வொரு பள்ளி நூலகத்த்ற்கு தேவையான புத்தகங்களை பட்டியலிட்டு அதனை பள்ளிகள் வாங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

2. அதே போல நூலகங்கள் பெயருக்கு பள்ளியில் இருக்காமல் அவை இயங்கவேண்டும், இயக்கமாக மாறவேண்டும். கண்டிப்பாக நூலக வகுப்புகளில் மாணவர்கள் நூலகத்தில் செலவிடவேண்டும். நூலக பாடத்தின்போது என்னென்ன செய்யலாம் என்றும் மாநில வழிகாட்டலாம். அதனை வடிவமைப்பதிலும் சங்கம் அரசுடன் துணை நிற்கும். நூலக பயன்பாட்டில் வெகுவான சீரமைப்பு தேவை.

3. போலவே ஆசிரியர்களும் நூலகத்தினை பயன்படுத்த அரசு ஊக்கப்படுத்தவேண்டும். உற்சாகப்படுத்த போட்டிகள், விழாக்கள், மாநில அளவில் இதழ்கள் ஆகியவற்றை கொண்டுவரலாம்.

சிறார் இதழ்

4. பள்ளி மாணவர்களுக்கான சிறார் இதழ் ஒன்றினை கொண்டுவரவேண்டும். அது வகுப்பிற்கு ஒன்று அல்லது இருபது மாணவர்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மாணவர்களிடையே கொண்டு செல்லவேண்டும். பாடநூல் கழகத்தின் துணைகொண்டு இதனை அச்சிடலாம். சங்கம் இந்த தயாரிப்பில் ஆலோசனைகளையும் படைப்புகளை தந்திட காத்திருக்கின்றது.

5. சிறார் இதழில் மாணவர்களின் பங்களிப்பு. மாவட்ட அளவிலான முன்னெடுப்புகள், மாநில அளவில் குழந்தைகளுக்கான வலைதளம், ஆசிரியர்களின் படைப்புகள், மாணவர்களுக்கான கட்டுரைகள், புதிர்கள் என்று பன்முகத்தன்மைகொண்டதாக வடிவமைக்கலாம்.

6. பள்ளிகள் திறந்ததும் உடனடியாக பாடங்களை துவங்காமல், அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லவும், பாடல்கள் பாடவும், ஓடியாடி விளையாடவும் ஏற்பாடு செய்யவேண்டும். மெல்ல மெல்ல பாடநூல்களுக்குள் செல்ல ஆரம்பிக்கலாம். ஏனெனில் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் சுமையில் இருக்கின்றார்கள். அதனை முதலில் அகற்றி, பள்ளிக்கு தினசரி வருவதை உத்திரவாதப்படுத்த இந்த ஏற்பாடு அவசியம்.

7. பள்ளிகள் திறக்கும் முன்னரே குழந்தைகள் அனைவரின் உடல்நலத்தினை பரிசோதனை செய்து, தேவையானவைகளை அரசு வழங்க வேண்டும். வழிகாட்டுதலை பெற்றோர்களுக்கு கொடுக்கவேண்டும். கடந்த 18 மாதமாக சரியா உணவில்லை, நேரத்திற்கு உணவில்லை போன்ற நிறைய சிக்கல்களை சந்தித்துள்ளனர்.

8. உடல்நலம் போலவே மனநலத்திலும் பள்ளிக்கல்வித்துறை கவனம் செலுத்தவேண்டியுள்ளது. வாரத்தில் ஒரு நாள் மனநல ஆலோசகர்கள் மாணவர்களுடன் அமர்ந்து பேசி, தீவிர சிக்கலில் இருப்பவர்களை மீட்டெடுக்க உதவவேண்டும். வீடரடங்கு பல்வேறு சிதவுகளைச் செய்துள்ளது.

  • தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts