மே 1 தொழிலாளர்கள் தினத்தில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 37-வது கிளையாக சேலம் மாவட்டக் கிளையின் தொடக்க விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கிளையின் பொறுப்பாளர்களாக தலைவர் – காயத்ரி (விரிவுரையாளர்)
துணைத்தலைவர் – மதுமதி (இதயவியல் துறை)
செயலாளர் – இந்துஜா (விரிவுரையாளர்)
துணைச்செயலாளர் – வசுமதி (தகவல் தொழில்நுட்பத்துறை)
பொருளாளர் – மகாலட்சுமி (ஆசிரியர்)
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக வலைதளங்களில் நிகழ்வு குறித்த செய்தி அறிந்த நண்பர்கள் மற்றும் புதியவர்கள் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார் அவர்களின் வழிகாட்டலின்படி தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உள்ள எழுத்தாளர்களின் நூல்களும், மற்ற எழுத்தாளர்களின் நூல்கள் அறிவியல்சார்ந்த நூல்கள் சிறுவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.வருகை தந்திருந்த பெரியவர்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வு நடக்கும் இடத்தில் சிறார் நூல்கள் தோரணமாக காட்சிப்படுத்தப்பட்டது. விரைவில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சேலம் கிளையில் நூலகம் தொடங்கப்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


