Tamil Nadu Children Writers and Artists Association

நான் வாசித்த புத்தகம் – 2025 | புத்தக மதிப்புரை போட்டி – முடிவுகள்

Reading Time: < 1 minute

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் நடத்திய “நான் வாசித்த புத்தகம் – 2025” என்ற புத்தக மதிப்புரை முயற்சி, குழந்தைகளிடையே வாசிப்பு ஆர்வத்தையும், சிந்தனைத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த முயற்சியில் தமிழ்நாடு மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த 110க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இலண்டன் தமிழ்ச் சங்கம், இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, எடின்பரா தமிழ் சங்கம்(ஸ்காட்லாந்து), Global Tamil School, மலேசியா தமிழ்ப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த முயற்சிக்கு ஆதரவளித்தன. பெறப்பட்ட மதிப்புரைகளை தட்டச்சு செய்து, வயது வாரியாகப் பிரிக்க உதவிய நண்பர்கள் அருண் & சரண்யா அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் & ஆங்கிலம் மொழிகளில், 8–12 வயது மற்றும் 13–18 வயது என மொத்தம் நான்கு பிரிவுகளில் குழந்தைகள் தங்கள் புத்தக மதிப்புரைகளை சமர்ப்பித்தனர்.

பெறப்பட்ட மதிப்புரைகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறார் எழுத்தாளர்கள் அடங்கிய தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டன.

தேர்வு முடிவுகள் – பிரிவுகள்

தேர்வுக் குழுவின் முடிவுகள் கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(Please click on the link below to view the results for the respective category.)

  1. தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தக விமர்சனம் (Selected Review)
  2. பாராட்டத்தக்க முயற்சி (Appreciated Effort)
  3. பங்கேற்பிற்கான பாராட்டு (Participation Appreciation)

தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தக விமர்சனங்கள் முதலில் எமது இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் அவை கிண்டில் தளத்தில் இ-புத்தகமாக வெளியிடப்படும்.
பாராட்டத்தக்க முயற்சிகள் எமது இணையதளத்தில் வெளியிடப்படும்.

குறிப்பு: ஏதேனும் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது பிழைகள் இருந்தாலோ, மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள்.

நன்றி,

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம்

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts