Tamil Nadu Children Writers and Artists Association

அமைப்பு விதிகள்

Reading Time: < 1 minute

பெயர் – தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

நோக்கம் – குழந்தைகள், பதின்பருவத்தினர், இளையோர் அனைவருக்குமான அடிப்படை நலன்கள், உரிமைகள், கலை, இலக்கியம், நுண்கலைகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியும், எதிர்காலத்தில் பாகுபாடுகளற்ற, சமத்துவமான உலகத்தை குழந்தைகளிடம் கொடுப்பதற்கான இயங்கும் அமைப்பாகும்.

உறுப்பினர் தகுதி – சிறார்களுக்காக சிறுகதை, நாவல், கவிதை, பாடல்கள், நாடகம், கதைப்பாடல், எழுதுகிற எழுத்தாளர்கள், கதைசொல்லிகள், நாடகக்கலைஞர்கள், ஓவியர்கள், ஓரிகாமி போன்ற நுண்கலைப்படைப்பாளிகள், சிறார் இலக்கிய வாசகர்கள், நிகழ்கலைப்பார்வையாளர்கள், போன்றவர்கள் உறுப்பினராகச் சேரலாம். உறுப்பினர்களாகச் சேர்பவர்கள் சங்கத்தின் கொள்கை அறிக்கையை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.

உறுப்பினர் ஆண்டுச்சந்தா – ரூ 100/

மாநிலமாநாட்டை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவேண்டும். அந்த மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாநிலசெயற்குழு உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்படவேண்டும். மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

மாவட்டமாநாடுகளை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவேண்டும். கிளை மாநாடுகளையும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவேண்டும்.

மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் கிளைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பு கீழ்க்கண்ட நிர்வாகக்குழுவைக் கொண்டதாக அமையும்.

மாநிலத்தலைவர், மாநிலத்துணைத்தலைவர், மாநிலச்செயலாளர், மாநிலத்துணைச்செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட இருபது செயற்குழு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு மாநில நிர்வாகக்குழுவாக இயங்கும்.

அனைத்து மாநிலக்குழுக்கூட்டங்களுக்கும் மாநிலச்செயற்குழுக்கூட்டங்களுக்கும் மாநிலத்தலைவர் தலைமை வகிப்பார். மாநிலத்தலைவர் இல்லாத சமயத்தில் மாநிலத்துணைத்தலைவர் தலைமை வகித்து நடத்துவார்.

மாநில அமைப்பின் அனைத்து நிகழ்வுகளுக்கும் மாநிலச்செயலாளரே பொறுப்பு. அவருக்கு உதவியாக மாநிலத்துணைச்செயலாளர் இருப்பார்.

மாவட்டங்களில் குறைந்த பட்சம் 10 பேர் கொண்ட கிளைகளை அமைக்கலாம். அந்தக்கிளைகளின் நிர்வாக அமைப்பு கீழ்க்கண்டவாறு இருக்கும்.

கிளைத்தலைவர், கிளைச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 7 பேருக்கு மிகாமல் செயற்குழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

உறுப்பினராக இல்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் சங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் பங்கெடுக்கவோ, தலையிடவோ முடியாது.

உறுப்பினர் சந்தா ரூ.100/ –ல் ஐம்பது ரூபாய் மாநில அமைப்புக்கு அனுப்பவேண்டும். ரூ 25/ மாவட்ட அமைப்புக்கும், ரூ 25/ கிளை அமைப்பும் எடுத்துக்கொள்ளலாம்.

மாநில அளவிலான முடிவுகளை மாநிலச்செயற்குழுவும், மாவட்ட அளவிலான முடிவுகளை மாவட்டச்செயற்குழுவும், கிளையளவிலான முடிவுகளை கிளையின் செயற்குழுவும் எடுக்கும்.

மாநில அளவில் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் அதைப் பற்றிய அறிக்கைகளை அவ்வப்போது மாநிலச்செயலாளருக்கு அனுப்பவேண்டிய பொறுப்பு மாவட்டச்செயலாளருக்கும், கிளைச்செயலாளருக்கும் உண்டு.

மாவட்டங்களில் கிளைகளை அமைத்தபிறகு மாவட்டச்செயலாளர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயல்பாட்டாளர்களை இணைத்துக் கொண்டு ஒரு மாநிலக்குழுவை உருவாக்க வேண்டும்.

சங்கத்தின் உறுப்பினர்கள் சங்கத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராகப் படைப்பு ரீதியாகவோ, நேரடிச் செயல்பாடுகளின் வழியாகவோ செயல்படும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை ( விளக்கம் கோருதல், கண்டித்தல், எச்சரித்தல், தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் ) எடுக்க மாவட்டக்குழு / மாநிலக்குழு / மாநிலச்செயற்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

தமிழ்க்குழந்தைகளின் நலன்களுக்காக சங்கத்தின் அத்தனை உறுப்பினர்களும் அயராது பாடுபட உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

இந்த அமைப்புவிதிகளுக்கு உட்பட்டு காலத்திற்கேற்ப துணை விதிகளையும் திருத்தங்களையும் சங்கம் மேற்கொள்ளும்.

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts